கன்னியாகுமரி கடற்கரை சாலையை ஆக்கிரமித்த தனியார் சொகுசு விடுதி
கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை சீசன் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள வருகின்றனர்
பக்தர்களின் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக சன்செட் பாயிண்ட் பகுதியில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் வேன், இங்கு நிறுத்தப்படுகின்றன.
கார் ஜீப் போன்ற சிறிய வாகனங்கள் காட்சி கோபுரம் முதல் சிலுவை நகர் பகுதி வரை உள்ள காலி இடங்களில் பார்க்கிங் செய்யபடுகிறது. இருப்பினும் அதிகப்படியான பக்தர்கள் வருகை தருவதால் வாகனங்களை நிறுத்த முடியாமல் இட நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலை பகுதியில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முக்கிய புள்ளி ஒருவரின் சொகுசு தங்கும் விடுதி முன்பு சுமார் 200 மீட்டர் அளவில் ராட்சத தடுப்புகள் அமைத்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த விடாமல் சொகுசு விடுதியின் பாதுகாவலர்கள் ஐயப்ப பக்தர்களை மிரட்டி வருகின்றனர்.
மேற்படி தனியார் சொகுசு விடுதியின் உரிமையாளர் ஆளுங்கட்சி பிரமுகர் மற்றும் முன்னாள் எம்பி என்பதால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment