தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 November 2024

தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை

 


தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:- 


நாகர்கோவில் செட்டிகுளம் ஜங்ஷனில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலையில் இடது புறம் உள்ள கழிவு நீர் ஓடையில் மேல் மூட பட்டிருந்த சிலாப்பை எடுத்து விட்டு அந்த பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றிய பிறகு அதன் மேல்தளத்தில் உள்ள சிலாப்பை சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக மூட படாமலும் அதை சரி செய்யாமலும் இருப்பதால் பொது மக்கள் நடைபாதையில் நடந்து செல்ல  முடியாமல் ரோட்டில் இறங்கி நடக்க கூடிய அவலம் ஏற்பட்டு உள்ளதால் தொடர்ந்து அடிக்கடி அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படுகிறது.மேலும் அந்த பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பொது மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கூட்டம் அதிகமாக கூடுவதாலும் நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள மருந்தகம் மற்றும் கடைகளில் சாமான்கள் வாங்க செல்வோர் ஓடையை தாண்டி தான் செல்ல முடியும், அப்படி செல்லும் போது அடிக்கடி அந்த பகுதியில் உள்ள ஓடையில் தவறி விழுந்து அடி பட்டு காயம் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.எனவே நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அந்த பகுதியில் உள்ள ஓடையின் மேல் சிமெண்ட் சிலாப்புகளை கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக் கொண்டார்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment