பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் நான்கு பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு... கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை... - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 November 2024

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் நான்கு பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு... கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை...

 


பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் நான்கு பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு... கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை...


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்க்கொண்டு வருகிறார்.  


அதன் தொடர்ச்சியாக தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய தர்மபுரம் பகுதியை சேர்ந்த சுயம்புலிங்கம் (எ) வாலி(42), தென்தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த செல்வம் (எ) தூத்துக்குடி செல்வம்(38), ராமன் புதூரை சேர்ந்த சஞ்சய் பிரபு(23), அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த வீரமணி(23) ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பரிந்துரைத்திருந்தார்கள். பரிந்துரையின் அடிப்படையில்  அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.


உத்தரவின் பேரில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரபடுத்தப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment