தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோட்டாரில் மாபெரும் பொதுக்கூட்டம்
கோட்டார் கச்சேரி ரோட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக அழகிய முன்மாதிரி இப்ராஹிம் அலை பத்து மாத தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு மாவட்ட தலைவர் முகம்மது ஹுசைன் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பிலும் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தணிக்கைக் குழு தலைவர் எம்.எஸ். சுலைமான் வஹீ மட்டுமே மார்க்கம் என்ற தலைப்பிலும் தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் ஹபீஸ் நவீன கலாச்சாரமும் இன்றைய இளைஞர்களும் என்ற தலைப்பிலும் தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்ட துணைத் தலைவர் நபீல் அஹ்மத் தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும் பணிகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இப் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் செய்யது அகமது கரீம், பொருளாளர் முகம்மது யாசிர் துணைத் தலைவர் நபில் அஹ்மத் துணைச் செயலாளர் முகம்மது ராபி, ஹஃபீஸ், ஆசிக் உசேன், யஹ்யா மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
இப்பொது கூட்டத்தில் கீழ் காணும் தீர்மானங்களை எடுக்கப்பட்டது.
உபியில் காட்டாட்சி
1. சம்பல் பகுதியில் கடந்த சில நாட்களாக இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் காவல்துறையும் ASI எனப்படும் இந்திய தொல்லியல் துறையும் தங்களின் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருகின்றன,மின் திருட்டு, வீடுகள் ஆக்கிரமிப்பு என்று புறக்கடை வழியாக ஒவ்வொரு வீடாக தேடலில் ஈடுபடுவது , அப்பாவி மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்துவதோடு , பாஜகவின் வெறுப்பு அரசியல் தொடர்ந்து தேசிய ஊடகங்களில் வியாபித்து இருக்க உதவுகிறது , வழக்குதொடுக்கப்பட்ட ஷாஹி ஜமா பள்ளிவாசல், சமீபத்தில் இடிக்கப்பட்ட நூரி பள்ளிவாசல் என முஸ்லிம் வெறுப்பு அரசியலை செய்யும் உபி பாஜகவின் யோகி அரசை இப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம்
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா
2. வக்ஃப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு முயற்சிக்கிறது, வக்ஃப் வாரியத்தை முழுமையாக செயலிழக்க செய்து
இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் பணியை இம்மசோதாவின் மூலம் அரங்கேற்ற நினைக்கும் ஒன்றிய மைனாரிடிட்டி பாஜக அரசை இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
இஸ்ரேலின் அராஜகங்கள்
3. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டபாலஸ்தீனியர்களுக்கெதிரான இன அழிப்பில் இதுவரை சுமார் 45000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், உலகம் வேடிக்கை பார்க்க ஒரு இனம் அழிக்கப்பட்டுவருகிறது, சர்வதேச போற் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இன அழிப்பை செய்யும் இஸ்ரேலுக்கு எதிரான பன்னாட்டு அரசியல் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும் மேலும் பாலஸ்தீன மக்களுக்கான நீதி கிடைப்பதில் இந்தியா பொறுப்புடன் செயல்பட வேண்டும் என பொதுக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.
அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை)
4. திருமறைக்குர் ஆனில் மனித குலத்திற்கு அழகிய முன்மாதிரி என்று கூறப்பட்டுள்ள நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாற்றையும் , வாழக்கை
செய்தியையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 10 மாத கால தொடர்பிரச்சாரத்தை மிகச்
சிறப்பாக இறைவனின் அருளால் செய்வோம் என இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக உறுதி ஏற்றனர்.
No comments:
Post a Comment