நோ பார்க்கிங்களில் வாகனங்கள் நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதி. விபத்துக்கள் ஏற்பட அதிகம் வாய்ப்பு. போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் அடுத்த சுங்கான் கடை அருகே உள்ள ஜே.ஜே டீ ஸ்டால் முன்பு காவல்துறை சார்பாக வாகனம் நிறுத்தக்கூடாது என்ற அறிவிப்பு பலகை வைத்தும் அதனை அலட்சியப்படுத்தும் விதமாக வாகனங்கள் அடிக்கடி அங்கு வாகனங்கள் நிறுத்தி வருகின்றனர். குறிப்பாக
அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் தான் இந்த நோ பார்க்கிங் அறிவிப்பு பலகையே வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு வாகன ஓட்டிகள் பலரும் வாகனங்களை நிறுத்தி விட்டு டீக்கடைக்கு செல்லுகின்றனர் .
இதனை அந்த டீக்கடை உரிமையாளரும் அங்கு வாகனங்கள் நிறுத்தக்கூடாது என கூறுவதும் இல்லை.
இன்று இயல்பை விட அதிகமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது காரணம் நேற்றைய தினம் கிறிஸ்மஸ் என்பதால் அனைவரும் வீட்டில் ஓய்வில் இருந்தனர் ஆனால் இன்று வழக்கத்திற்கு அதிகமாக வாகனங்கள் அப்பகுதியில் ஊர்ந்து செல்லுகின்றன.
இதிலும் இப்படி நோ பார்க்கிங்கிங்களில் வாகனங்கள் நிறுத்துவதால் கூடுதல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் விபத்துகளும் ஏற்பட அதிக உள்ளது எனவே போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என எச்சரிக்கை எடுக்க வேண்டும் மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்
என். சரவணன்
No comments:
Post a Comment