குமரி மாவட்டம் காரன் காடு பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கம்யூனிட்டி கல்லூரியில் ஆண்டு விழா - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 December 2024

குமரி மாவட்டம் காரன் காடு பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கம்யூனிட்டி கல்லூரியில் ஆண்டு விழா

 


குமரி மாவட்டம் காரன் காடு பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கம்யூனிட்டி கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி  மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது‌.


இக்கல்லூரியானது இரண்டு  மற்றும்  மூன்று வருட பாராமெடிக்கல், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படிப்புகளையும் வழங்குகிறது .மேலும் 10,+2  தவறிய  மாணவர்கள் பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்தபடியே  ஆன்லைன் தேர்வு எழுதும் வாய்ப்பை வழங்குகிறது .இக்கல்லூரியானது மாணவர்களுக்கு திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து  கற்று  கொள்ளும்  வாய்ப்பை வழங்குகிறது  .அது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பு உத்தராவத த்தையும் வழங்குகிறது.  இக்கல்லூரியில்  இந்த வருடம் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு  கல்லூரியின் முதல்வர் தலைமை தாங்கினார்.விழாவிற்கு தலைமை விருந்தினர் Dr அனிதா ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கு எற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும் போது  பாராமெடிக்கல்  என்பது  மருத்துவ துறையில்   மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் அவசியமான ஒரு துறையாக பரிணமித்து வளர்ந்து வரும் மருத்துவ துறையாகும். வேலை வாய்ப்பு  மிகுந்த இந்த துறையை தேர்ந்தெடுத்திருக்கும்  மாணவர்கள்  காலத்தை  வீணக்காமல் தன்னம்பி க்கையோடு வாழ்வில் முன்னேற  வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் . மேலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட குமரி டெக்  நிறுவனர்  Mr.அனிடஸ்   பேசும் போது  தீ மற்றும் பாதுகாப்பு படிப்பின் எதிர்கால நோக்கம் அதின் வேலை வாய்ப்புகள்  குறித்தும் மேலும் இந்த துறையில் படிக்கும் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று   பேசினார் . சிறப்பு விருந்தினராக ஜோசப்  பள்ளி தாளாளர் Mr.ஆண்டனி சேவியர் கிறிஸ்துமஸ் வாழ்த்து  ரையாற்றினார்.நிகழ்ச்சியில். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  சிறப்பு பரிசுகள் கல்லூரியின் சார்பில்  வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment