கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு பிரசாதம் தயாரிப்பு தொடங்கப்பட்டது
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உட்பிரகாரம் அமைந்துள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் உடைய ஆஞ்சநேயருக்கு வருகின்ற 29ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி துவங்கி 30 ம்தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி நடைபெறுகிறது இந்த விழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் பெருமளவு கலந்து கொள்வார்கள் வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்கு ஒரு லட்சம் லட்டு தட்டுவடை சந்தனம் குங்குமம் ஆகிவை வழங்குவதற்காக இன்று லட்டு தயாரிக்கும் பணியை இந்து அறநிலைத்துறை அறங்காவல் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார் அவருடன் அறங்காவல் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் மற்றும் அறங்காவல் குழு உறுப்பினர்கள் பேரூராட்சி தலைவர் அனுசுயா கோவில் மேலாளர் ஆறுமுகதரன் கணக்கர் கண்ணன் ளஆகியோர் உடன் இருந்தனர் ஆஞ்சநேயர்ஜெயந்தி தினத்தன்று காலை 10 மணி முதல் அன்னதானம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்
என். சரவணன்
No comments:
Post a Comment